வெங்காய புலாவ்


aromatic onion pulao recipe

தேவையான பொருட்கள்:

  • பாசுமதி அரிசி - 2 கப் (1/2 மணிநேரம் ஊறவைத்தது)
  • வெங்காயம் - 2 (நறுக்கியது)
  • கேரட் - 1 (நறுக்கியது)
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • கிராம்பு - 5
  • பட்டை - 1
  • பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
  • நெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 6 (தோலுரித்தது)
  • வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • சர்க்கரை - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு



செய்முறை:

  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து, பின் அதில் சின்ன வெங்காயத்தை போட்டு 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் நெய்யை ஊற்றி, சீரகத்தை போட்டு தாளிக்கவும்.
  • பின் அதில் வெங்காயத்தை போட்டு, கிராம்பு மற்றும் பட்டையை போட்டு, நன்கு 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
  • பிறகு அத்துடன் கேரட் மற்றும் பச்சை மிளகாயை போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
  • பின் பாசுமதி அரிசியை கழுவி, அதோடு சேர்த்து 2 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும். வதக்கியதும் அதில் 3 கப் தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பை சேர்த்து, ஒரு 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
  • அதே சமயம் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை போட்டு உருகியதும், சர்க்கரை மற்றும் வேக வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும், அதனை வெந்து கொண்டிருக்கும் அரிசியுடன் சேர்த்து கலந்து, மற்றொரு 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
  • இப்போது சுவையான வெங்காய புலாவ் ரெடி!!! இதனை ஊறுகாய் அல்லது ஏதேனும் ஒரு சைடு டிஷ் உடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.


Popular Posts