இஞ்சி சூப்
தேவையான பொருட்கள்:
- இஞ்சி விழுது - 5 டீஸ்பூன்
- தண்ணீர் - 2 கப்
- தேன் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
- மிளகு தூள் - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
- பின் அதில் இஞ்சி விழுதை போட்டு, நன்கு 4-5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
- பிறகு அதோடு தேன், எலுமிச்சை சாறு, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
- இப்போது சத்தான இஞ்சி சூப் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.