மங்லோரியன் சிக்கன்
தேவையான பொருட்கள்:
- சிக்கன் - 1 கிலோ (சுத்தமாக கழுவியது)
- வெங்காயம் - 1 (நறுக்கியது)
- தேங்காய் பால் - 1/2 கப் (கெட்டியானது)
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- மல்லி தூள் - 1 டீஸ்பூன்
- பட்டை - 1
- கிராம்பு - 3
- ஏலக்காய் - 3
- வரமிளகாய் - 4
- தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- புளி தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.
- பின்னர் வதக்கி இறக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி வரமிளகாய், சீரகம், இஞ்சி பூண்டு விழுது, கிராம்பு, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்கு 1 நிமிடம் வதக்க வேண்டும்.
- பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காயப் பேஸ்ட், மஞ்சள் தூள், மல்லி தூள், புளி தண்ணீர், தேங்காய் பால் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து, கொதிக்க விட வேண்டும்.
- மசாலா கொதித்ததும், அதில் சிக்கன் துண்டுகளை போட்டு, சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி, மூடி போட்டு சிக்கன் வேகும் வரை கொதிக்க விட்டு, மசாலா ஓரளவு கெட்டியான பின் இறக்க வேண்டும்.
- இப்போது சுவையான கோரி ரோட்டி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவி, ரொட்டி என்னும் சப்பாத்தியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.