கோதுமை ரவை உப்புமா


Wheat Rava Upma

தேவையான பொருட்கள்:

  • கோதுமை ரவை - 1 கப்
  • பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
  • தக்காளி - 1 (நறுக்கியது)
  • வரமிளகாய் - 2
  • இஞ்சி - சிறிது
  • கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
  • கடுகு - 1/2 டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள் - சிறிது
  • கறிவேப்பிலை - சிறிது
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு



செய்முறை:

  • முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  • பின் அதில் பொருங்காயத்தூளை தூவி, வரமிளகாயை கிள்ளிப் போட்டு, இஞ்சியை தட்டிப் போட்டு ஒரு முறை கிளற வேண்டும்.
  • பிறகு அத்துடன் வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.
  • பின்னர் அதில் ஒரு 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • தண்ணீர் கொதித்ததும், அதில் கோதுமை ரவையை சேர்த்து, சிறிது நேரம் மூடி போட்டு மூடி வைக்கவும்.
  • பின் மூடியை திறந்து ரவை அடி பிடிக்காமல், தண்ணீர் சுண்டும் வரை நன்கு கிளறி இறக்கிவிட வேண்டும்.
  • இப்போது சுவையான கோதுமை ரவை உப்புமா ரெடி!!! இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.


Popular Posts